கிட்ஸ் கீரை பொரியல்

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  10 minutes

சமையல் நேரம்: 15 minutes

பரிமாறும் அளவு: 3 loaf

தேவையான பொருட்கள்: 


கீரை (தண்டுக்கீரை, அரைக்கீரை) – 1 கட்டு

வெங்காயம் – 1

சீரகம் - 1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – சிறிது

எண்ணெய், உப்பு – சுவைக்கு

அரைக்க:  


தேங்காய் (கட் பண்ணியது) - 1 டேபிள்ஸ்பூன்

பூண்டு – 5

வறுத்த வேர்கடலை – 2 டீஸ்பூன்

வரமிளகாய் – 1


கிட்ஸ் கீரை பொரியல்

கிட்ஸ் கீரை பொரியல்

விரிவுரை :

  குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான ரெசிப்பி. நெய் விட்டு கொடுக்கலாம். வேர்கடலை நிறைய சேர்த்தால் அனைவரும் விரும்பி உண்ணுவர்.

செய்முறை: 


• கீரையை கழுவி பொடியாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்தவற்றை சற்று கோர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

• வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

• இதனுள் தண்ணீரில் கழுவிய கீரையை சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.

• தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளிக்கவும். 

• கீரை நன்றாக வெந்ததும் சீரகம், உப்பு சேர்த்து, அரைத்த விழுது போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

• சுவையான கிட்ஸ் கீரைப் பொரியல் ரெடி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாப்ட் பூரி

சன்னா கிரேவி

ஈஸி தக்காளி சாதம்