தக்காளி குழம்பு

சமையல் வல்லுநர்:
தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  15 minutes

சமையல் நேரம்: 15 minutes

பரிமாறும் அளவு: 2 loaf


அரைக்கீரைப் பொரியல்
தக்காளி குழம்பு

விரிவுரை :

  இது சாதம் மற்றும் இட்லிக்கு பொருத்தமாக இருக்கும்

தேவையான பொருட்கள்: 

- தக்காளி - 3

- சின்ன வெங்காயம் - 20

- கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்

- கறிவேப்பிலை - 1 கொத்து

- கொத்தமல்லி - சிறிதளவு

- தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

- வரமிளகாய் - 2

- எண்ணைய், உப்பு - தேவைக்கு

 தாளிக்க : 


- கடுகு - 1 டீஸ்பூன்

- உளுந்து - 1 டீஸ்பூன்

- சின்ன வெங்காயம் (நறுக்கியது) - 5

- கறிவேப்பிலை - 1 கொத்து

 செய்முறை: 

 •முதலில் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்

 • வாணலியில் தேவையான எண்ணைய் ஊற்றி கடலைப்பருப்பு, வெங்காயம், வரமிளகாய் சேர்த்து வதக்கவும் 

• பிறகு தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்
 • கறிவேப்பிலை, கொத்தமல்லியை அதனுடன் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும். பிறகு தேங்காய்த்துருவல் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்  

 • இந்த கலவை ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் 


• வாணலியில் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளிக்கவும். பின்பு அரைத்ததைக் கலந்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் 

 • சுவையான தக்காளி குழம்பு ரெடி குறிப்பு: இது சாதம் மற்றும் இட்லிக்கு பொருத்தமாக இருக்கும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாப்ட் பூரி

சன்னா கிரேவி

மணத்தக்காளி கீரை பொரியல்