கேரட் சட்னி

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  5 minutes

சமையல் நேரம்: 10 minutes

பரிமாறும் அளவு: 2 loaf

தேவையான பொருட்கள்: 

கேரட் – 2

உளுந்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்

பூண்டு – 3 பல்

கறிவேப்பிலை – 5 இதழ்

தேங்காய் – 3 ஸ்பூன்

புளி – சிறிதளவு

வரமிளகாய் – 2

உப்பு – சுவைக்கு

தாளிக்க:

கடுகு உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

எண்ணெய் – தேவைக்கு


தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும். கேரட்டை தோல் சீவி நறுக்கவும்.

தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும். கேரட்டை தோல் சீவி நறுக்கவும்.


உளுந்தம்பருப்பை தனியாக சிவக்க வறுக்கவும். அடுப்பை அனைத்து விட்டு அந்த சூட்டிலேயே பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து ஆற விடவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு உளுந்தம்பருப்பை தனியாக சிவக்க வறுக்கவும். பின் வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.


கேரட் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.

கேரட் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.


தேங்காய் புளி சேர்த்து பிரட்டி ஆற விடவும்.

தேங்காய் புளி சேர்த்து பிரட்டி ஆற விடவும்.


எஉப்பு கலந்து அரைத்து, தாளிக்க கொடுத்தவற்றை தாளித்துக் கொட்டவும். டேஸ்டி சட்னி ரெடி.

உப்பு கலந்து அரைத்து, தாளிக்க கொடுத்தவற்றை தாளித்துக் கொட்டவும். டேஸ்டி சட்னி ரெடி.

விரிவுரை :

  தோசைக்கு இந்த சட்னி பொருத்தமாக இருக்கும்.

செய்முறை: 

• தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும். கேரட்டை தோல் சீவி நறுக்கவும்.

• வாணலியில் எண்ணெய் விட்டு உளுந்தம்பருப்பை தனியாக சிவக்க வறுக்கவும். பின் வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

• கேரட் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.

• தேங்காய் புளி சேர்த்து பிரட்டி ஆற விடவும்.

• உப்பு கலந்து அரைத்து, தாளிக்க கொடுத்தவற்றை தாளித்துக் கொட்டவும். டேஸ்டி சட்னி ரெடி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாப்ட் பூரி

மணத்தக்காளி கீரை பொரியல்

சன்னா கிரேவி