இடுகைகள்

June, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மணத்தக்காளி கீரை பொரியல்

படம்
சமையல் வல்லுநர்:Mangayarkarasi
தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:10 minutes

சமையல் நேரம்:10 minutes

பரிமாறும் அளவு: 3 loaf

தேவையான பொருட்கள்: 
- மணத்தக்காளி கீரை - 1 கட்டு

- சின்ன வெங்காயம் (அரிந்தது) - 7

- வரமிளகாய் – 3

- பூண்டு – 3 பல்

- சீரகம் – 2 டீஸ்பூன்

- கடுகு - 1 டீஸ்பூன்

- உளுந்து - 1 டீஸ்பூன்

- தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்

- உப்பு, எண்ணைய் - தேவைக்கேற்ப
மணத்தக்காளி கீரையை கழுவி பொடியாக நறுக்கவும்.வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.இதனுள் தண்ணீரில் அலசிய கீரையைப் போட்டு கை அளவு நீர் சேர்த்து வேக வைக்கவும்.பாதி வெந்ததும் முழு சீரகம் சேர்க்கவும்.கீரை நன்றாக வெந்ததும் உப்பு, தேங்காய்த்துருவல் போட்டு இறக்கவும்சுவையான மணத்தக்காளி கீரைப் பொரியல் ரெடி.

விரிவுரை : கார குழம்பிற்கு நன்றாக இருக்கும். விருப்பம் இருந்தால் வேர்க்கடலை அரைத்து பொரியலுடன் சேர்க்கலாம். சுவையாக இருக்கும். செய்முறை:  • மணத்தக்காளி கீரையை கழுவி பொடியாக நறுக்கவும்.

• வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.

• …

உருளை சுக்கா

படம்
சமையல் வல்லுநர்:Mangayarkarasi
தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:5 minutes

சமையல் நேரம்:15 minutes

பரிமாறும் அளவு: 3 loaf

தேவையான பொருட்கள்: 
- உருளைக்கிழங்கு – கால் கிலோ

- மட்டன் மசால் – 1 டேபிள்ஸ்பூன்

- உப்பு – சுவைக்கு

- எண்ணெய் – தேவைக்கு


உருளைக்கிழங்கை நன்கு அலசி பெரிய மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கவும்.வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு உருளைக்கிழங்கை வதக்கவும்.லேசாக வதங்கியதும் மட்டன் மசால் சேர்த்து பிரட்டி விடவும்.உருளையின் தோல் மொறு மோறுப்பாகும் வரை வதக்கவும். தேவைக்கு சிறிதளவு எண்ணெய் சேர்க்க வேண்டும்.சுவை மிகுந்த உருளை சுக்கா ரெடி.

விரிவுரை : தோசைக்கு இந்த சட்னி பொருத்தமாக இருக்கும். செய்முறை:  • உருளைக்கிழங்கை நன்கு அலசி பெரிய மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கவும்.


• வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு உருளைக்கிழங்கை வதக்கவும்.

• லேசாக வதங்கியதும் மட்டன் மசால் சேர்த்து பிரட்டி விடவும்.

• உருளையின் தோல் மொறு மோறுப்பாகும் வரை வதக்கவும். தேவைக்கு சிறிதளவு எண்ணெய் சேர்க்க வேண்டும்.

• சுவை மிகுந்த உருளை சுக்கா ரெடி.


கேரட் சட்னி

படம்
சமையல் வல்லுநர்:Mangayarkarasi
தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:5 minutes

சமையல் நேரம்:10 minutes

பரிமாறும் அளவு: 2 loaf

தேவையான பொருட்கள்:  - கேரட் – 2

- உளுந்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்

- பூண்டு – 3 பல்

- கறிவேப்பிலை – 5 இதழ்

- தேங்காய் – 3 ஸ்பூன்

- புளி – சிறிதளவு

- வரமிளகாய் – 2

- உப்பு – சுவைக்கு

தாளிக்க:

- கடுகு உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

- கறிவேப்பிலை – 1 கொத்து

- எண்ணெய் – தேவைக்குதேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும். கேரட்டை தோல் சீவி நறுக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு உளுந்தம்பருப்பை தனியாக சிவக்க வறுக்கவும். பின் வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.கேரட் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.தேங்காய் புளி சேர்த்து பிரட்டி ஆற விடவும்.உப்பு கலந்து அரைத்து, தாளிக்க கொடுத்தவற்றை தாளித்துக் கொட்டவும். டேஸ்டி சட்னி ரெடி.

விரிவுரை : தோசைக்கு இந்த சட்னி பொருத்தமாக இருக்கும். செய்முறை:  • தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும். கேரட்டை தோல் சீவி நறுக்கவும்.

• வாணலியில் எண்ணெய் விட்டு உளுந்தம்பருப்பை தனியாக சிவக்க வறுக்கவும். பின் வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்த…

ஈஸி இட்லி பொடி

படம்
சமையல் வல்லுநர்:Mangayarkarasi
தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:5 minutes

சமையல் நேரம்:15 minutes

பரிமாறும் அளவு: 2 loaf

தேவையான பொருட்கள்: 
- உளுந்தம்பருப்பு (வெள்ளை) – 200 கிராம்

- கறிவேப்பிலை – கை அளவு

- வரமிளகாய் – 4

- பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்

- உப்பு – சுவைக்கு


வாணலியில் வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலையை நன்கு வறுக்கவும்.உளுந்தம்பருப்பை தனியாக சிவக்க வறுக்கவும். அடுப்பை அனைத்து விட்டு அந்த சூட்டிலேயே பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து ஆற விடவும்.மிக்சியில் உளுந்தை முதலில் கொர கொரப்பாக அரைத்துக் கொண்டு பின் வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து அரைக்கவும்.தேவையான உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.எளிதான இட்லி பொடி ரெடி.

விரிவுரை : இது கறிவேப்பிலை வாசத்துடன் நல்லெண்ணெய் கலந்து இட்லி, தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும். உடம்புக்கும் நல்லது. செய்முறை:  • வாணலியில் வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலையை நன்கு வறுக்கவும்.

• உளுந்தம்பருப்பை தனியாக சிவக்க வறுக்கவும். அடுப்பை அனைத்து விட்டு அந்த சூட்டிலேயே பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து ஆற விடவும்.

• மிக்சியில் உளுந்தை முதலில் கொர கொரப்பாக அரைத…

பீர்க்கங்காய் கறி

படம்
சமையல் வல்லுநர்:Mangayarkarasi
தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:10 minutes

சமையல் நேரம்:10 minutes

பரிமாறும் அளவு: 2 loaf

தேவையான பொருட்கள்: 
- பீர்க்கங்காய் – 1

- சின்ன வெங்காயம் – 4

- தக்காளி – 1

- பூண்டு – 3

- மஞ்சள்தூள் – 1 சிட்டிகை

- சாம்பார்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்

- உப்பு – சுவைக்கு

தாளிக்க:

- கடுகு உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

- கறிவேப்பிலை – 1 கொத்து

- எண்ணெய் – தேவைக்கு
பீர்க்கங்காய், வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.கடாயில் கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி வதங்கியதும் பீர்க்கங்காயை கொட்டி வதக்கவும்.அரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், குழம்பு தூள் சேர்க்கவும்.கொதித்ததும் அடுப்பைக் குறைத்து வைத்து வேக விடவும்.காய் நன்றாக வெந்ததும் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கிளறி இறக்கவும். சுவையான பீர்க்கங்காய் கறி தயார்.

விரிவுரை : பீர்க்கங்காய் எளிதில் ஜீரணமாகும் நீர்ச்சத்து உடைய காய். இந்த பீர்க்கங்காய் கறி, சாதம் மற்றும் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம். செய்முறை:  • பீர்க்கங்காய், வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.

•…

முட்டை ட்ரை மசாலா

படம்
சமையல் வல்லுநர்:Mangayarkarasi
தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:15 minutes

சமையல் நேரம்:15 minutes

பரிமாறும் அளவு: 2 loaf

தேவையான பொருட்கள்: 
- முட்டை – 2

- வெங்காயம் – 1

- தக்காளி – 1

- இஞ்சி-பூண்டு (தட்டியது) – 2 டீஸ்பூன்

- மஞ்சள்தூள் – 1 சிட்டிகை

- கரம் மசாலா – 1 டீஸ்பூன்

- பிரியாணி மசால் – 1 டேபிள்ஸ்பூன்

- கறிவேப்பிலை – 1 கொத்து

- உப்பு – சுவைக்கு

தாளிக்க:

- கடுகு உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

- சீரகம் – அரை டீஸ்பூன்

- எண்ணெய் – தேவைக்குமுட்டையை வேக வைத்து இரண்டாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளி நறுக்கி வைக்கவும். இஞ்சி-பூண்டு தட்டிக் கொள்ளவும்.கடாயில் தாளித்து, வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலா மற்றும் பிரியாணி மசால் சேர்க்கவும்.மசால் வாசம் போனதும் நறுக்கிய முட்டையை சேர்க்கவும்.மஞ்சள் கரு உடையாமல் மசால் முட்டையில் படுமாறு நன்கு பிரட்டி விடவும். கறிவேப்பிலையை நறுக்கி சேர்க்கவும்.சுவையான எக் மசாலா ரெடி. இது பருப்பு சாதத்திற்கு செம காம்பினேஷன்.

விரிவுரை : முட்டையை வெறுமனே வேக வைத்து சாப்பிடுவதை விட இந்த மாதிரி செய்தால் …

கோதுமை ரவை உப்புமா

படம்
சமையல் வல்லுநர்:Mangayarkarasi
தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:5 minutes

சமையல் நேரம்:10 minutes

பரிமாறும் அளவு: 2 loaf

தேவையான பொருட்கள்: 
- பகோதுமை ரவை – 200 கிராம்

- சின்ன வெங்காயம் – 4

- தக்காளி – 1

- பச்சை மிளகாய் – 3

- இஞ்சி – 1 அங்குல துண்டு

- மஞ்சள்தூள் – 1 சிட்டிகை

- கொத்தமல்லி – 1 டீஸ்பூன்

- தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

- உப்பு – சுவைக்கு

தாளிக்க:

- கடுகு உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

- கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

- சீரகம் - 1 டீஸ்பூன்

- மிளகு – அரை டீஸ்பூன்

- கறிவேப்பிலை – 1 கொத்து

- எண்ணெய் – தேவைக்குகோதுமை ரவையை லேசாக வாசம் வர வறுக்கவும்.


வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சியை நறுக்கி வைக்கவும்.கடாயில் கடுகு, பருப்புகள், மிளகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து வதக்கவும்.தக்காளி, தேங்காய்த்துருவல் சேர்த்து குழைய வதக்கவும்.2 1/2 கப் தண்ணீர் மற்றும் மஞ்சள்தூள் சேர்க்கவும்.கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து கோதுமை ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.2 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.


நன்றாக வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி தயிர் அல்லது தேங…

காளான் குழம்பு

படம்
சமையல் வல்லுநர்:Mangayarkarasi
தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:5 minutes

சமையல் நேரம்:20 minutes

பரிமாறும் அளவு: 2 loaf

தேவையான பொருட்கள்: 
- பட்டன் காளான் – 200 கிராம்

- வெங்காயம் – 1

- தக்காளி – 1

- பச்சை மிளகாய் – 3

- இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

- மஞ்சள்தூள் – 1 சிட்டிகை

- கரம் மசாலா – 1 டீஸ்பூன்

- சாம்பார் தூள் – 1 டேபிள்ஸ்பூன்

- தேங்காய்ப்பால் – அரை டம்ளர்

- கொத்தமல்லி – 1 டீஸ்பூன்

உப்பு – சுவைக்கு


தாளிக்க:
- கடுகு உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

- கறிவேப்பிலை – 1 கொத்து

- எண்ணெய் – தேவைக்கு
பட்டன் காளானை ஈரத்துணியால் சுத்தம் செய்து வைக்கவும். அல்லது ஓடும் நீரில் கழுவிய உடன், துணியால் நன்கு துடைக்கவும்.வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காளானை நறுக்கி வைக்கவும். 4 தேக்கரண்டி தேங்காய்த்துருவலை நீர் விட்டு அரைத்து பாலெடுக்கவும்.கடாயில் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.அரை கப் தண்ணீர் சேர்த்து மஞ்சள்தூள், கரம் மசாலா மற்றும் சாம்பார் தூள் கலந்து விடவும்.கொதித்ததும் காளான் சேர்க்கவும்.2 நிமிடம் கழித்து கெட்டியான…